மேலும் செய்திகள்
திடீர் கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சி
25-Aug-2025
சிதம்பரம் : சிதம்பரம் பகுதிகளில், கடந்த இரு நாட்களாக மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலுார் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, சிதம்பரம் பகுதியில் வெயில் வாட்டி வதைத்தது. சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை திடீரென மழை பெய்தது. இதேப் போன்று நேற்று மாலையும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. திடீர் மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
25-Aug-2025