மேலும் செய்திகள்
தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
16-Nov-2024
கடலுார் : கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட ஏணிக்காரம் தோட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா முன்னிலையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் கலெக்டர் கூறியதாவது: கடலுார் மாநகராட்சிக்கு உட்பட்ட ஏணிக்காரன் தோட்டம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மழைநீர் தேங்கியிருந்ததால் அதனை மேட்டார் பம்புசெட் மூலம் அகற்றப்பட்டும், குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு எளிதில் பாதுகாப்பான முறையில் செல்ல தற்காலிக பாதையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஏணிக்காரன் தோட்டம் அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து சார்ந்த கணக்கெடுப்பு சரிவர மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்தும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி சத்துமாவு, பிஸ்கெட்டுகள் வழங்கவேண்டும். குழந்தைகளின் வயதிற்கேற்ற எடை மற்றும் உயரம் உள்ளதா என சோதித்து, ஊட்டசத்து அளவினையும் பதிவேடுகளில் சரிவர பராமரித்து அதற்கேற்ப குழந்தைகளை கவனிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவு தரமானதாகவும், சுகாதாரமானதாகவும், குழந்தைகளுக்கு பிடித்த வகையில் சுவையானதாகவும் சமைத்து வழங்கிட வேண்டும். மையத்தினை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் மரு.அனு, கடலுார் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
16-Nov-2024