மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு போட்டி
நெல்லிக்குப்பம்.நவ25- நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. சேர்மன் ஜெயந்தி தலைமை தாங்கி கூட்டத்தை துவக்கி வைத்தார். கமிஷ்னர் ஜீவிதா, துணைத் தலைவர் கிரிஜா, தலைமை ஆசிரியர் தேவநாதன், பொறியாளர் கண்ணன், நகரமைப்பு ஆய்வாளர் செந்தில்குமார் செழியன், கவுன்சிலர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். மழைநீர் சேகரிப்பு என்பது மிகவும் கட்டாயமானது. மழை நீரை சேகரித்தால் மட்டுமே வரும் காலங்களில் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும். எனவே மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் இது பற்றி எடுத்துக் கூறி வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டியை அமைக்க வேண்டும் என கமிஷ்னர் ஜீவிதா கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேச்சு மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர்.