ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கியது
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் காமராஜர் நகர் அருகே ரயில்வே சுரங்கபாதை உள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த வாரம் பெய்த மழையால் சுரங்கபாதை நிரம்பியுள்ளது.இதனால் மக்களுக்கு பாதையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. தண்ணீர் தேங்கி நிற்பதால், அவ்வழியே செல்லும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் தண்ணீர் தேங்கி நின்றால் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ளதால் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டுமென பிரசாரம் செய்கின்றனர்.ஆனால் சுரங்கபாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.