உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயிலில் இருந்து தவறிவிழுந்து ராமேஸ்வரம் வாலிபர் படுகாயம்

ரயிலில் இருந்து தவறிவிழுந்து ராமேஸ்வரம் வாலிபர் படுகாயம்

கடலுார் : கடலுார் முதுநகர் அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்து காயமடைந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த வாலிபர், கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் லெனின்,25. இவர் புதுச்சேரியிலுள்ள ஜவுளிக்கடையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ஸ்டேஷனில் இரவு 10.30மணியளவில் ஏறினார். ரயில் புறப்பட்டதும், லெனின் பேசிக்கொண்டிருந்தார். காரைக்காடு அருகே சென்றபோது, செல்போன் தவறி விழுந்தது. அதை பிடிப்பதற்காக முயற்சி செய்த லெனின் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர், அங்கேயே மயக்கமடைந்தார். காலையில் மயக்கம் தெளிந்து, கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தலை, கண் மற்றும் தோள் பகுதியில் காயமடைந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை