கடலுாரில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கடலுார் : கடலுார் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில நிர்வாகக்குழு சுரேஷ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் பழனிவேல் துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் ஜீவானந்தம், துணைத் தலைவர் பெரியசாமி, துணை செயலாளர் பன்னீர்செல்வம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பொது வினியோக திட்டத்தை தனித்துறையாக்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர் பெறும் அனைத்து சலுகைகளையும் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.