உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நந்தப்பாடியில் ரேஷன் கடை கிராம மக்கள் கோரிக்கை

நந்தப்பாடியில் ரேஷன் கடை கிராம மக்கள் கோரிக்கை

பெண்ணாடம்: நந்தப்பாடி பகுதி ரேஷன் கடைக்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடம் அடுத்த நந்தப்பாடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வெண்கரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பகுதி நேர ரேஷன் கடை ஊராட்சிக்கு சொந்தமான பழமையான கட்டடத்தில் துவங்கப்பட்டது.இதன் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை உட்பட ரேஷன் பொருட்கள் மக்களுக்க விநியோகம் செய்யப்படுகிறது. ரேஷன் கடையில் இட பற்றாக்குறை மற்றும் மழை நேரங்களில் மழைநீர் கசிவதால் சர்க்கரை, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால், வெண்கரும்பூர் கூட்டுறவு சங்க அலுவலகதத்தில் ரேஷன் பொருட்களை இருப்பு வைத்து, அவ்வப்போது எடுத்து வந்து மக்களுக்கு வழங்க வேண்டிய நிலை உள்ளது.எனவே, நந்தப்பாடி பகுதி நேர ரேஷன் கடைக்கு சொந்தக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை