உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட ரேஷன் ஊழியர்கள்

போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட ரேஷன் ஊழியர்கள்

பண்ருட்டி: பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் ரேஷன்கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலம் ரேஷன் கடை விற்பனையாளர் எழிலரசி. இவரிடம், கடந்த 18ம் தேதி அதே ஊரை சேர்ந்த வெண்ணிலா என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய வெண்ணிலா மீது நடவடிக்கை கோரி பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயசந்திரராஜா தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 6:00 மணிக்கு திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், 6:45 மணிக்கு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை