உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் மாணவர்களுக்கு பரிசளிப்பு

வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் மாணவர்களுக்கு பரிசளிப்பு

சிதம்பரம்: வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டது. அதில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். நேரு உருவப்படத்தை வரைந்தும், கல்வியே அழியாத செல்வம் என்றத் தலைப்பில் உரை ஆற்றியும், புத்தக வாசிப்பின் பயன்கள் அல்லது எனக்கு பிடித்த திருக்குறள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதி இருந்தனர். இதில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு இறையன்பு எழுதிய புத்தகங்கள் மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்கு ஊக்கப் பரிசாக பேனா வழங்கப்பட்டது. சிதம்பரம் நகர் மன்றத் துணைத்தலைவர் முத்துக்குமரன் சிறப்புரை ஆற்றினார். போட்டிக்கான ஏற்பாடுகளை வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை