உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் வாக்குவாதம்

உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் வாக்குவாதம்

விருத்தாசலம்,: விருத்தாசலத்தில் பிரேத பரிசோதனை முடிந்த உடல்களை எடுத்துச் செல்ல வாகனம் இல்லாததை கண்டித்து, உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் சித்தலுார் காலனியை சேர்ந்தவர் வீராசாமி மகள் காவ்யா, 16. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத கார் மோதியதில் படுகாயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதேபோல், பேரளையூர் காலனியை சேர்ந்த சேட்டு மகன் விக்னேஷ், 23, என்பவர் வயிற்று வலியால் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரது உடல்கள், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்க தயார் நிலையில் இருந்தன.இந்நிலையில், தமிழக அரசின் அமரர் ஊர்தி டிரைவர் உடல்நலக்குறைவு காரணமாக விடுமுறையில் சென்றதால், பிரேதங்களை எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் மாணவியின் உறவினர்கள் மற்றும் வாலிபரின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தாசில்தார் உதயகுமார் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் இருந்து இலவச அமரர் ஊர்தி வாகனம் வரவழைக்கப்பட்டது.இருப்பினும். மாணவியின் சடலத்தை அவரின் உறவினர்கள் தனியார் ஆம்புலன்சில் ஏற்றிச் சென்றனர். இதனால், அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ