மேலும் செய்திகள்
ஏர்போர்ட் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
05-Feb-2025
கடலுார்; கடலுார் பூ மார்க்கெட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகில் பூ மார்க்கெட் உள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. கடலுார் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினசரி வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர். அதேபோல் வெளி மாவட்டங்களுக்கும் இங்கிருந்து பூ மாலைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் பூ மார்க்கெட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் உள்ளதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது. இதையடுத்து, மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் தலைமையிலான ஊழியர்கள் பூ மார்க்கெட்டில் கடைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போத, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளின் மேற்கூரைகள் மற்றும் கீற்று கொட்டகைகளை அகற்றினர். பின், பூக்கடைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றபோது, கடை உரிமையாளர்கள் தாங்களாகவே அகற்றிக்கொள்வதாக கூறினர்.அப்போது, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் டி.எஸ்.பி., ரூபன்குமார் ஆகியோர், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிக்கொள்ள ஒரு நாள் அவகாசம் வழங்குவதாக கூறிவிட்டு சென்றனர்.இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
05-Feb-2025