மேலும் செய்திகள்
சென்னிமலையில் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் ஆலோசனை
07-Nov-2024
நடுவீரப்பட்டு; கடலுார் மாவட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மழை நிவாரணம் வழங்க, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தி.மு.க., மாவட்ட நெசவாளர் அணி துணைத்தலைவர் சேகர், மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்க மாவட்ட செயலாளர் தட்சணாமூர்த்தி ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலுார் கைத்தறி சரகத்தில் உள்ள 52 கூட்டுறவு கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தில் 3 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் நெசவு செய்து வருகின்றனர்.தற்போது தொடர் மழையால் நெசவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஊர்களில் கைத்தறியின் குழிகளில் தண்ணீர் கசிவு மற்றும் ஊற்று நீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தறியில் உள்ள பாவுகள் நனைந்து வீணாகி உள்ளது.எனவே, கைத்தறி துறை சார்பில் நெசவாளர்களுக்கு மழைகால நிவாரணம் வழங்க முதல்வர், கைத்தறி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
07-Nov-2024