உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல்லிக்குப்பத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகர வர்த்தகர்கள் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் நாசர்அலி தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, அமைப்பாளர் அதியமான் முன்னிலை வகித்தனர். பொருளாளர் அசன்அலி வரவேற்றார். செயலாளர் மணிவண்ணன், சட்ட ஆலோசகர் கெய்க்வாட்பாபு பேசினர்.அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன, உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் பரிசு வழங்கினர்.கூட்டத்தில், ஆலை ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளை இடித்து விரைவாக கட்ட வேண்டும். தற்போது கடைகள் வைத்திருப்பவர்களுக்கே வழங்க வேண்டும். ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பை தடுக்க வேண்டும்.ஆலை ரோட்டில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.சங்க துணைத் தலைவர் காசிம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி