உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அருகேரி ஏரியை துார்வார கோரிக்கை

 அருகேரி ஏரியை துார்வார கோரிக்கை

திட்டக்குடி: வடகரை சாலையோரம் உள்ள அருகேரி ஏரியை துார்வார வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - திட்டக்குடி அடுத்த அருகேரியில் வடகரை செல்லும் சாலையோரம் 20 ஏக்கர் பரப்பில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் பராமரிப்பின்றி ஏரிக்கு வரும் நீர்வரத்து வாய்க்கால்கள் துார்ந்தன. இதனால், அருகில் உள்ள விவசாயிகள் ஏரியை ஆக்கிரமித்து பயிர் செய்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஏரியை வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் ஒன்றிய அதிகாரிகள் மீட்டு, ஏரி துார்வாரும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முழுமையாக துார்வாராமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அருகிலுள்ள விவசாயிகள் மீண்டும் ஏரியை ஆக்கிரமிக்க துவங்கி உள்ளனர். அதனால், கிடப்பில் போடப்பட்ட ஏரி துார்வாரும் பணியை மீண்டும் துவக்க, நல்லுார் ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை