தொழில்வரி கூடுதல் கட்டணம் மறுபரிசீலனை செய்ய கோரிக்கை
பரங்கிப்பேட்டை: தொழில் வரி கூடுதல் கட்டணத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி, பரங்கிப்பேட்டை வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன், பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகனனிடம், கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதிகளில் செயல்படும் வர்த்தகர்களுக்கு தொழில் வரியை கடந்த ஆண்டை விட பலமடங்கு உயர்த்தி கூடுதல் கட்டணம் வசூலிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. தொழில் வரி பலமடங்கு கூடுலாக வசூலிப்பதால் நகர வணிகர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.ஏற்கனவே, மத்திய, மாநில அரசுகளுக்கு வணிகர்கள் செலுத்தும் பல வரிகள் சுமையாக இருக்கும்போது, தற்போது தொழில் வரி அதிகரிப்பு மேலும் சுமையாகும். தற்போது உயர்த்த இருக்கும் கூடுதல் கட்டணத்தை மறுபரிசீலனை செயய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.