உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  புறக்காவல் அமைக்க கோரிக்கை

 புறக்காவல் அமைக்க கோரிக்கை

ராமநத்தம்: கொரக்கவாடியில் புறக்காவல் நிலையம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. மாவட்ட எல்லையில் கொரக்கவாடி, பனையாந்துார், சித்தேரி, எஸ்.நாரையூர் உட்பட, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், சேலம் மாவட்ட எல்லைகளையொட்டி அமைந்துள்ளன. இப்பகுதிகள், வருவாய் மற்றும் காவல்துறை கண்காணிப்பிலிருந்து விலகி உள்ளன. இதை பயன்படுத்தி, 3 மாவட்டங்களின் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் சமூக விரோதிகள், கள்ளச்சாராயம் விற்பது, மணல் கடத்தல், திருட்டு, வழிப்பறி, ரேஷன் அரிசி கடத்தல், வன விலங்குகள் வேட்டையாடுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இது குறித்து ராமநத்தம், சிறுபாக்கம் போலீசார் பலரை கைது செய்து நடவடிக்கை எடுத்தும், மாவட்ட எல்லை பகுதியில் தொடர் குற்றங்கள் நடக்கிறது. ராமநத்தம் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து, 14கி.மீ., துாரமும், சிறுபாக்கம் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து 16 கி.மீ., துாரத்திலும், மாவட்ட எல்லையோர கிராமங்கள் உள்ளன. அதனால், மாவட்ட எல்லையில் அதிக குற்றங்கள் நடக்கும் கொரக்கவாடியில், புறக்காவல் நிலையம் அல்லது காவல் கண்காணிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ