மாட்டு வண்டியில் மணல் எடுக்க கோரிக்கை
நெல்லிக்குப்பம்; வான்பாக்கம் மணல் குவாரியில் மாட்டு வண்டிகளுக்கும் மணல் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து நகராட்சி சேர்மன் ஜெயந்தியிடம், மாட்டு வண்டி உரிமையாளர்கள் அளித்த மனு: வண்டி மாடுகளை வைத்து கொண்டு வேலை கிடைக்காமல் மாடுகளை பராமரிக்கவே சிரமப்படுகிறோம். தற்போது வான்பாக்கம் பெண்ணையாற்றில் மணல் குவாரி துவங்க உள்ளனர். எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மாட்டு வண்டிகளுக்கும் மணல் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. தி.மு.க.தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், வி.சி., நகர செயலாளர் திருமாறன் உடனிருந்தனர்.