உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேப்பூரில் கல்லுாரி அரசுக்கு கோரிக்கை

வேப்பூரில் கல்லுாரி அரசுக்கு கோரிக்கை

வேப்பூர் : வேப்பூரில் அரசு கல்லுாரி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.வேப்பூர் தாலுகாவில் 53 வருவாய் கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் அரசு கல்லூரி இல்லாததால், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, தனியார் பாலிடெக்னிக், கலைக் கல்லூரிக்கு சென்று படிக்கின்றனர்.விருத்தாசலம், திட்டக்குடி அரசு கல்லூரிகளில் சேர்ந்தாலும், தொலைவின் காரணமாக படிப்பை தொடர முடியாமல், பாதியில் கை விடுகின்றனர். எனவே, வேப்பூரில் அரசு கல்லுாரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு வேப்பூர் மற்றும் சுற்றுபுற பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை