உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காவல் துறையில் புகார் 166 மனுக்களுக்கு தீர்வு

காவல் துறையில் புகார் 166 மனுக்களுக்கு தீர்வு

சிதம்பரம் : சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் புகார் மனுக்கள் மீதான சமரச கூட்டம் நடந்தது.சிதம்பரம் காவல் உட்கோட்டத்தில் உள்ள சிதம்பரம், அண்ணாமலை நகர், புவனகிரி, சிதம்பம் தாலுகா, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், கிள்ளை ஆகிய காவல் நிலைய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பிரச்னைகள் குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பல்வேறு புகார் மனுக்கள் அளித்து வருகின்றனர்.அந்த புகார் மனுக்களின் மீதான, தீர்வு ஏற்படுத்தும், கூட்டம் நேற்று சிதம்பரம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன், டி.எஸ்.பி., லாமேக், தலைமையில் புகார் மனுக்கள் குறித்து, புகார்தாரர், எதிர்மனுதாரர் என இரு தரப்பினரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது.இதன் மூலம் உட்கோட்ட காவல் நிலையத்திற்குட்பட்ட, 166 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை