மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
28-Dec-2024
கடலுார் : கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் மரியதாஸ், கந்தசாமி, வையாபுரி, கோதண்டராமன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் இளங்கோவன் துவக்கவுரையாற்றினார்.மாநில பொதுச்செயலாளர் அபரஞ்சி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், அரசு தொழிற்பயிற்சி அலுவலர்கள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் தர்மலிங்கம், மின்வாரிய ஓய்வுபெற்றோர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.அப்போது, இணை செயலாளர்கள் ராஜூ, சவரிமுத்து, சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார்.மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
28-Dec-2024