உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல்

ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல்

வடலுார்: வடலுார், பார்வதிபுரம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், 62; போலீஸ் துறையில் எஸ்.ஐ., ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில், பாதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சிவபெருமான் குடும்பத்தினர், செல்வராஜை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவம் குறித்து செல்வராஜ் குறிஞ்சிப்பாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவின் பேரில் கொலை மிரட்டல் விடுத்த சிவபெருமான், அவரது மனைவி மோகனா, மகன் அருண், ஜே.சி.பி., ஓட்டுனர் லட்சுமணன் ஆகிய, 4 பேர் மீது வடலுார் போலீசார் வழக்குப்பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ