தடுப்பு வேலி அமைக்காததால் உயிர்பலி ஏற்படும் அபாயம்
வி ழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதனை கடந்த ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிலையில் கடலுார் அடுத்த ஆலப்பாக்கம், சிதம்பரம் அடுத்த சிலம்பிமங்களம் பகுதிகளில், நான்கு வழிச்சாலையின் குறுக்கே, தடுப்பு கம்பிகள் அமைக்காமல் உள்ளது. இதனால் இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை உள்ளது. கடந்த மாதம் 21ம் தேதி இரவு, பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி ஆலப்பாக்கம் மேம்பாலம் அருகே தடுப்பு வேலி அமைக்காத சாலை வழியாக சென்றபோது, எதிரில் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுபோல் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. எனவே ஆலப்பாக்கம், சிலம்பிமங்களத்தில் நான்கு வழிச்சாலையின் இடையே, தடுப்பு வேலி அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.