உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை விபத்து: இளம்பெண் பலி

சாலை விபத்து: இளம்பெண் பலி

திட்டக்குடி : திட்டக்குடியில் டிப்பர் லாரி மோதி சைக்கிளில் சென்ற இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.திட்டக்குடி, மணல்மேட்டை சேர்ந்தவர் சங்கர் மகள் கோமதி, 18; நேற்று பகல் 11:30 மணியளவில் திட்டக்குடி - ராமநத்தம் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த டி.என். 28 - ஏ.எல். 4145 பதிவெண் கொண்ட டிப்பர் லாரி மோதியதில் கோமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.திட்டக்குடி போலீசார் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோமதியின் அக்கா காயத்ரி கொடுத்த புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை