உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்

குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்

சிறுபாக்கம் : சிறுபாக்கத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுபாக்கம் ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள செல்லியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்காக மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டாக குடிநீர் தொட்டி பழுதடைந்து பயன்பாடின்றி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மங்களூர் ஒன்றியக்குழு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் நேற்று காலை 7:00 மணிக்கு காலி குடங்களுடன் திட்டக்குடி- சிறுபாக்கம் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர். இதையடுத்து 7:30 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை