மேலும் செய்திகள்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
19-Sep-2025
நெய்வேலி : நெய்வேலி தொகுதியில் சாலை அமைக்கும் பணியை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நெய்வேலி தொகுதிக்குட்பட்ட காட்டுக்கூடலுார் ஊராட்சியில், காட்டுக்கூடலுார் முதல் நண்டுக்குழி வரை 1.27 கோடி ரூபாய் மதிப்பிலும், செம்மங்குப்பம் முதல் நண்டுக்குழி வரை 1.01 கோடி ரூபாய் மதிப்பிலும் சாலை அமைக்கும் பணியை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். பண்ருட்டி முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், ஓவர்சியர் ஞானசேகர், பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன், முன்னாள் கவுன்சிலர் ஞானசேகர், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் சுமதி நந்தகோபால், முன்னாள் ஊராட்சி தலைவர் பாரி, ஊராட்சி செயலாளர் கோதண்டபாணி, முன்னாள் கவுன்சிலர் அஞ்சலை, குமாரவேல், முருகன், கலைக்குமார், பிரேம், ரவிச்சந்திரன், மணிமொழி, அன்பழகன், சேது, வாசுதேவன், சீனிவாசன் பங்கேற்றனர்.
19-Sep-2025