உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லட்சுமி சோரடியா பள்ளியில் சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி

லட்சுமி சோரடியா பள்ளியில் சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி

கடலுார்; கடலுார் லட்சுமி சோரடியா பள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா, உதவி தலைமை ஆசிரியர் பத்தாகான் முன்னிலை வகித்தனர். இன்சூரன்ஸ் இன்ஸ்டிட்யூட் சார்பில் முன்னாள் முதன்மை மேலாளர் நடேசன், முன்னாள் மேலாளர் செல்வநாதன், முன்னாள் செயலாளர் உலகநாதன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு சாலை விதிகள் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தினர். மேலும், காப்பீடு திட்டங்கள் பற்றியும், அதன் நன்மை குறித்தும் பேசினர். ஏற்பாடுகளை நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் துணை மேலாளர் வெங்கடேசன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி