மேலும் செய்திகள்
வாலிபரை தாக்கிய ரவுடி கைது
15-Sep-2026
விருத்தாசலம்: ஜாமினில் வந்த பிரபல ரவுடியை மீண்டும் போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் பூந்தோட்டத்தை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ்,24; சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் கடந்த ஜூன் மாதம், வாலிபரை தாக்கி, வழிப்பறி செய்து, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் விருத்தாசலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த சுபாஷ்சந்திபோஸ், கோர்ட்டில் கையெழுத்திடவில்லை. இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் சந்துரு, கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனையேற்ற மாஜிஸ்திரேட், சுபாஷ்சந்திரபோஸிற்கு அளித்த ஜாமினை ரத்து செய்தை தொடர்ந்து, அவரை , விருத்தாசலம் போலீசார், கைது செய்து, மீண்டும் சிறையில் அடைத்தனர்.
15-Sep-2026