உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் ஷோரூமில் ரூ. 1 லட்சம் கொள்ளை

பைக் ஷோரூமில் ரூ. 1 லட்சம் கொள்ளை

நடுவீரப்பட்டு :பண்ருட்டியில் டி.வி.எஸ்., பைக் ஷோரூம் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாய் பணத்தை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பண்ருட்டி லட்சுமிநாராயணபுரத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 64; இவர், பண்ருட்டியில் டி.வி.எஸ்.,பைக் ஷோரூம் நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை 9:00 மணிக்கு வழக்கம் போல் கடையை திறந்தபோது, கடையின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கடையின் மேஜை டிராவில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது.இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு ராமமூர்த்தி தகவல் கொடுத்தார். குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் கைரேகை நிபுணர்களுடன் வந்து சோதனை செய்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கடையின் பூட்டை உடைத்து பணம் திருடியவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை