ரூ.1.70 கோடி கோவில் ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
வேப்பூர்; வேப்பூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலம் அகற்றப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வேப்பூரில் பழமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இதற்கு, சொந்தமாக 4,860 சதுர அடியில் பரப்பளவிலான நிலம், காட்டுமயிலுார் கூட்டுரோட்டில் அமைந்துள்ளது. இதனை, சிலர் ஆக்கிரமிப்பு செய்த நிலையில், அதை மீட்க வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடலுார் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ரூ., 1.70 கோடி மதிப்பிலான இடத்தின் சொத்துக்கள் மீட்டு, கோவில் நிர்வாகத்திடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதனால், அப்பகுதி கிராம மக்கள், பக்தர்கள் ம கிழ்ச்சி அடைந்தனர்.