உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாஸ்மாக் மது வாங்க சென்றவரின் பைக் பெட்டியில் ரூ.2.8 லட்சம் அபேஸ்

டாஸ்மாக் மது வாங்க சென்றவரின் பைக் பெட்டியில் ரூ.2.8 லட்சம் அபேஸ்

சின்னசேலம் : சின்னசேலம் அருகே பைக் பெட்டியை உடைத்து ரூ 2.8 லட்சம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த எஸ்.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் 55, இவர் நேற்று முன் தினம் காலை 10.00 மணிக்கு தனது மனைவி அம்பிகாவுடன் நைனார்பாளையம், கனரா வங்கியில் அடகு வைத்துள்ள எட்டு சவரன் தங்க நகையை மீட்பதற்காக ரூ 2.8 லட்சம் பணத்துடன் வங்கிக்கு வந்துள்ளார். வங்கியில் நகையை மீட்பதற்கு காலதாமதமாகும் என்றனர். இதனால், அம்பிகாவை பஸ்ஸில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்தார். ரூ.2.8 லட்சம் பணத்தை தனது பைக் பெட்டியில் வைத்து பூட்டியுள்ளார். பகல் 2.30 மணி அளவில் வி. கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு பைக்கை நிறுத்திவிட்டு மது பாட்டில் வாங்க சென்றார்.பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, பைக் பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ 2.8 லட்சம் பணம் திருடு போயிருந்தது.புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை