உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஆளும் கட்சியின் செயல்பாடு உளவுத்துறைக்கு ரகசிய அசைன்மென்ட்

 ஆளும் கட்சியின் செயல்பாடு உளவுத்துறைக்கு ரகசிய அசைன்மென்ட்

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியில் வருவாய் துறை மற்றும் அங்கன்வாடி மைய ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் வாக்காளர்களிடம், பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவம் வழங்குதல், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை பெற்று, அவற்றை கணினியில், பதிவேற்றம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை தேர்தல் பணியை பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த எஸ்.ஐ.ஆர்., பணிகளை ஆளும் கட்சியினர் கண்காணிக்கின்றனரா என உளவுத்துறை போலீசாருக்கு நேற்று ரகசிய 'அசைன்மென்ட்' தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாவட்டத்திலுள்ள உளவுத்துறை போலீசார் இப்பணிகளில் ஆளும் கட்சியினரின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதை ரகசியமாக கண்காணித்து அறிக்கை தயாரித்து ஆளும் கட்சியின் தலைமைக்கு அனுப்ப தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், வாக்காளர்களின் நிலைப்பாடு குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்