விருதை ஒன்றிய அலுவலகத்தில் மணல் மூட்டைகள் தயார்
விருத்தாசலம்,: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெள்ள தடுப்பு பணிக்கு, விருத்தாசலம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு பருமழை துவங்கியதையொட்டி, மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெள்ள பாதிப்பை தடுக்கும் நோக்கில், மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, விருத்தாசலம் ஒன்றியத்தில் உள்ள கிராமப்புறங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒன்றிய அலுவலகத்தில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணி தீவிராமாக நடந்து வருகிறது.