விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சங்காபிேஷகம்
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.காலை 10:00 மணிக்கு மேல், உலக நன்மை வேண்டி சுவாமி சன்னதியில் புனிதநீர் கலசம், 108 சங்குகள் வைத்து சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. பின்னர், உச்சிசாம பூஜையில் சுவாமிக்கு சங்காபிேஷகம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். இதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர் வெள்ளிக்கவசத்தில் அருள்பாலித்தார். அதேபோன்று, வேடப்பர், ஏகநாயகர், மோகாம்பரி அம்மன் உள்ளிட்ட கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது.