மேலும் செய்திகள்
தரமில்லாத கட்டுமான பணி மாநகர கவுன்சிலர்கள் தர்ணா
21-Jun-2025
துாய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
13-Jun-2025
கடலுார்: கடலுார் மாநகராட்சி அலுவலகத்தில் துாய்மைப் பணியாளர்கள், சம்பள பாக்கி வழங்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.கடலுார் மாநகராட்சியில் உள்ள குப்பைகள், தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் அகற்றப்படுகிறது. இந்நிறுவனத்தின் கீழ் கடலுார் மாநகரில் 350க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக்கூறி, நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த தனியார் நிறுவன மேலாளர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனையேற்று துாய்மை பணியாளர் கலைந்து சென்றனர்.
21-Jun-2025
13-Jun-2025