உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சங்கடஹர சதுர்த்தி பூஜைகள்

சங்கடஹர சதுர்த்தி பூஜைகள்

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் நடந்தது. சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மூலவரும்,உற்சவர் ஊஞ்சல் உற்சவத்திலும் அருள்பாலித்தனர். நேற்று கிருத்திகை என்பதால் சுபரமணிய சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். தர்மகர்த்தா சுந்தரமூர்த்தி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். அருள்தரும் ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை