உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

கடலுார்: மாவட்ட அளவிலான கட்டுரை போட்டியில் முதலிடம் பெற்ற கடலுார் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு, கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.கடலுார் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சு மற்றும் கவிதை போட்டிகள் நடந்தது. இதில் கடலுார் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி ஸ்ரீ அபிராமி கட்டுரை போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவி சென்னையில் நடந்த மாநில அளவிலான கட்டுரைப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாமிடம் பெற்றார்.மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கப்பட்டது. கடலுாரில் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் கருணாநிதி நுாற்றாண்டு விழா பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில், மாணவி ஸ்ரீ அபிராமிக்கு, கலெக்டர் அருண்தம்புராஜ் பாராட்டு சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கினார்.மாணவியை, பள்ளித்தலைவர் சிவக்குமார், நிர்வாக செயல் அலுவலர் லட்சுமி சிவக்குமார், தாளாளர் கஸ்துாரி சொக்கலிங்கம், நிறுவனர் சொக்கலிங்கம், மக்கள் தொடர்பு அலுவலர் சிவராஜ், பள்ளி முதல்வர் உதயகுமார் சாம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ