மேலும் செய்திகள்
திருவாதிரை சிறப்பு பூஜை
24-Oct-2024
பெண்ணாடம்: சஷ்டியையொட்டி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில், சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.இதையொட்டி, நேற்று காலை 8:00 மணியளவில், மூலவர் பிரளயகாலேஸ்வரர், அழகிய காதலி அம்மன் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, மாலை 4:30 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர் ஆகிய பொருட்களால் சிறப்பு அபிேஷகம்; மாலை 5:00 மணியளவில் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.இதேபோன்று, திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவில், திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவில், இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில், பெண்ணாடம் காமராஜர் வீதி, பாலதண்டாயுதபாணி ஆகிய கோவில்களில் சஷ்டி சிறப்பு பூஜை நடந்தது.
24-Oct-2024