உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சத்ய சாய்பாபா ரத ஊர்வலம்

 சத்ய சாய்பாபா ரத ஊர்வலம்

கடலுார்: கடலுார் சத்ய சாய் சேவாசமிதி சார்பில், சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா ரத ஊர்வலம், கடலுாரில் நடந்தது. சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், அவரது அன்பு, சேவை, தெய்வீக செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், கடந்த மே மாதம் சென்னையில் சத்ய சாய் பிரேம ரத ஊர்வலம் துவங்கியது. ஒவ்வொரு மாவட்டங்களாக ரத ஊர்வலம் நடந்துவரும் நிலையில், சமீபத்தில் கடலுார் மாவட்டத்தில் நடந்தது. கடலுார் மாவட்ட முதன்மை நீதிபதி சுபத்திராதேவி தலைமை தாங்கி, பிரேம ரத ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் சாய் பிரசாத், சமிதி கன்வீனர் சண்முகம் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். கடலுார் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பிரேம ரத ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை