உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பள்ளி ஆண்டு விழா

 பள்ளி ஆண்டு விழா

கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீவள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர்களுக்கான ஆண்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் சீனுவாசன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் இந்துமதி சீனுவாசன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன. விழாவில் உதவி தலைமை ஆசிரியர் மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மழலையர்கள் யோகா செய்து அசத்தினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை