உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சமூக விரோதிகள் புகலிடமாக பள்ளி வளாகம்

சமூக விரோதிகள் புகலிடமாக பள்ளி வளாகம்

நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் சமையல் கூடம், குழந்தைகள் மையம் உள்ளன. பள்ளி அருகிலேயே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல்படுகிறது.பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால் முன்பகுதியில் கேட் இல்லை. இதனால் பள்ளி வளாகம் திறந்த நிலையிலேயே உள்ளது. இதனால் பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. குறிப்பாக போதை ஆசாமிகள் மது அருந்திவிட்டு, பாட்டில்களை அங்கேயே உடைத்து செல்கின்றனர். இதனால் பள்ளிக்கு வரும் குழந்தைகள், ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை