உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் நகராட்சி பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் தேவநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட கருத்தாளர் தேவகி மாணவர் சேர்க்கை, உயர்கல்வி வழிகாட்டி பற்றி பேசினார். மாணவர்களிடம் போதை பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது. கல்வி, விளையாட்டுகளில் சிறந்து விளங்க பாடுபடுவது. நடப்பு ஆண்டு பொதுத் தேர்வில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சிக்கு பாடுபடுவது என, உறுதியேற்றனர். வீடு வீடாக சென்று பள்ளியின் சிறப்புகளை எடுத்துக் கூறி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ