பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
கடலுார்: கடலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் சர்வதேச போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு தின பேரணி நடந்தது.கடலுார், மஞ்சக்குப்பம் ஜெயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் ஜெயின்ட் ஜோசப் பள்ளி, நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று போதை பழக்கத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகயை ஏந்திச் சென்றனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கமிஷனர் அனு, சி.இ.ஓ., எல்லப்பன், கலால் உதவி ஆணையர் சந்திரகுமார், ஆர்.டி.ஓ., அபிநயா, டாக்டர் சத்தியமூரத்தி உட்பட பலர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் மாணவர்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்ற போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.