உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க ஆயத்தம்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க ஆயத்தம்

கடலுார்: கோடை விடுமுறை முடிந்து, வரும் 2ம் தேதி பள்ளிகள் திறப்பதையொட்டி, மாவட்டத்தில் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை துாய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் 2ம் தேதி திறப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்டம் வாரியாக கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதனையொட்டி கடலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பராமரிப்பின்றி கிடக்கும் வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகத்தை துாய்மைப்படுத்தும் பணியில் பள்ளி நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.குடிநீர், கழிவறை மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து, நிவர்த்தி செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளில், மாணவர்களுக்கு அரசின் விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டு, புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை