ஆற்றில் மூழ்கிய வாலிபர் தேடும் பணி தீவிரம்
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த கட்ட முத்துப்பாளையம் கிராமம், ஆற்று தெருவை சேர்ந்த தீனதயாளன் மகன் வேலன்,18; கூலித்தொழிலாளி. இவர் நேற்று பிற்பகல் கண்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றில் நண்பர்கள் 4பேருடன் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது வேலன் ஆழமான பகுதியில் சிக்கி கொண்டார். தகவலறிந்த பண்ருட்டி தீயணைப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வேலனை தேடிப்பார்த்தும், அவர் கிடைக்கவில்லை. பண்ருட்டி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.