உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விதை உற்பத்தி மானிய தொகை வழங்கல்

விதை உற்பத்தி மானிய தொகை வழங்கல்

குறிஞ்சிப்பாடி: தினமலர் செய்தி எதிரொலியாக, விவசாயிகளுக்கு விதை மானிய தொகை வழங்கப்பட்டு வருகிறது. குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் மணிலா, நெல், எள் ஆகியவற்றை விதை உற்பத்திக்காக விளைவித்து, அரசு பண்ணைகளில் ஒப்படைத்து வருகின்றனர். சிறு, குறு விவசாயிகள் முதல், பெரிய விவசாயிகள் வரை இந்த விதை உற்பத்தி பணியில் ஈடுபட்டு பயனடைந்து வருகின்றனர். இந்த விவசாயிகளுக்கான விதை உற்பத்தி மானிய தொகை இந்தாண்டு வழங்கப்படாமல் இருந்து வந்தது. இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து தற்போது விவசாயிகளின் வங்கி கணக்குகளில் விதை உற்பத்தி மானிய தொகை தற்போது வரவு வைக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ