மேலும் செய்திகள்
கல்லுாரியில் கருத்தரங்கம்
13-Aug-2025
கடலுார்; கடலுாரில், தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் சார்பில், மாநில பிரதிநிதிகள் கருத்தரங்கம் நடந்தது. மாநில துணைத்தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சீனுவாசன் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் ஜெயச்சந்திரராஜா, சரவணன், வீராசாமி, தாமஸ் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார், கருத்தரங்கை துவக்கி வைத்தார். அய்யநாதன், பெரியசாமி, பன்னீர்செல்வம், மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியன், மார்க்ஸ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு கொள்கையை அனைத்து நிலை பணியிடங்கள், அரசு மற்றும் பொதுத் துறைகளில் பின்பற்ற வேண்டும். மது, போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது குறித்து பேசப்பட்டது. மாவட்ட செயலாளர் ராஜாமணி நன்றி கூறினார்.
13-Aug-2025