உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செம்மேடு கெடிலம் ஆற்று பாலம் உடைந்தது

செம்மேடு கெடிலம் ஆற்று பாலம் உடைந்தது

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு கெடிலம் ஆற்று பாலம் உடைந்ததால் ஏரிப்பாளையம்- முத்தாண்டிக்குப்பம் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.பண்ருட்டி அடுத்த செம்மேடு கெடிலம் ஆற்றங்கரையில் உள்ள பாலம் ஏரிப்பாளையம்- பேர்பெரியான்குப்பம் செல்லும் முக்கிய சாலையாகும். தென்பெண்ணையாற்றில் 2லட்சத்து 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதையொட்டி அதிகளவில் கெடிலம் ஆற்றில் வெள்ள நீர் சென்றது. பாலத்தின் மேல் நான்கு அடிக்கு மேல் தண்ணீர் சென்ற நிலையில் நேற்று காலை 7:00 மணிக்கு பாலத்தின் ஒரு பகுதி முற்றிலும் இடிந்து சேதமானது. இதனால், ஏரிப்பாளையம்- முத்தாண்டிக்குப்பம், கருக்கை, சேந்தநாடு செல்லும் பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது. செம்மேடு கெடிலம் ஆற்று புதிய பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த ஒரு ஆண்டாக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. இந்நிலையில் உபயோகத்தில் இருந்த பழைய பாலம் சேதமானதால் நெடுஞ்சாலைத்துறையினர் தற்காலிக ஏற்படாக மாற்று வழி போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை