செம்மேடு புதிய பாலம் கட்டுமானம் சரிந்தது
பண்ருட்டி; செம்மேடு, கெடிலம் ஆற்றில் புதிய பாலம் கட்டுமான சரிந்து விழுந்தது.பண்ருட்டி அடுத்த செம்மேடு கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பழைய பாலம் உடைந்தது.மேலும், பழைய பாலம் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தில் கான்கிரீட் போட தயார் நிலையில் வைத்திருந்த சென்ட்ரிங் பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டது. அதில் இருந்த கம்பிகள் வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமானது.