உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தபால் நிலையத்தில் சர்வர் பழுது வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்

தபால் நிலையத்தில் சர்வர் பழுது வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் தபால் நிலையத்தில் சர்வர் பழுதால், காத்திருந்த வாடிக்கையாளர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.நெல்லிக்குப்பம் தபால் நிலையம் முழுதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. நேற்று திடீரென சர்வர் பழுதானது.இந்நிலையில், நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், பணம் செலுத்தவும், எடுப்பதற்கும், காப்பீடு தொகை மற்றும் மாதாந்திர சேமிப்பு தொகை செலுத்த என பல்வேறு பணிகளுக்காக 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் குவிந்திருந்தனர்.சர்வர் பழுதால், எந்த பணியும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், காத்திருந்த வாடிக்கையாளர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்து, அனுப்பி வைத்தனர். இதனால், தபால் நிலைய அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி