தையல் இயந்திரம்: அமைச்சர் வழங்கல்
சிறுபாக்கம்,: சிறுபாக்கம் அருகே விதவை பெண்களுக்கு, அமைச்சர் கணேசன் தையல் இயந்திரங்கள் வழங்கினார். சிறுபாக்கம் அடுத்த கழுதுாரில் � வெங்கடேஸ்வரா கல்வி அறக்கட்டளை மற்றும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சார்பில் விதவை பெண்களுக்கு இரண்டாம் கட்டமாக இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, தையல் இயந்திரங்களை வழங்கினார். � வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் வெங்கடேசன், முதல்வர்கள் பசுபதி, பிரபாகர், செல்வ முருகன் உடனிருந்தனர்.